UPDATED : டிச 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: வித்யாசாகர் மகளிர் கல்லூரி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு பேரணி செங்கல்பட்டில் நடந்தது.
உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் வழிகாட்டி பெண்கள் அமைப்பு இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தின. செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய பேரணியை செங்கல்பட்டு முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ் துவக்கிவைத்தார்.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி தலைவர் மோகன் வரவேற்றார். வழிகாட்டி இயக்குனர் வசந்தா நன்றி கூறினார்.
