தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியருக்கு வாராந்திர பயிற்சி முகாம்

மாணவ, மாணவியருக்கு வாராந்திர பயிற்சி முகாம்

மாணவ, மாணவியருக்கு வாராந்திர பயிற்சி முகாம்


UPDATED : நவ 16, 2013 12:00 AM

ADDED : நவ 16, 2013 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2013 12:00 AM ADDED : நவ 16, 2013 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் 19ம் தேதி வாராந்திர பயிற்சி முகாம் நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக், ஹேண்ட்பால் மற்றும் தேக்வாண்டோ விளையாட்டுகளுக்கு வாராந்திர சிறப்பு பயிற்சி முகாம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் வரும் 19ம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

நீச்சல் போட்டி மட்டும் சேலம், சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் தேர்வு செய்யப்படும் 20 வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு பயிற்றுனர்கள் மூலம் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் போது உணவு, சிற்றுண்டி, பயணப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் வயது சான்றிதழுடன் வர வேண்டும்.

இத்தகவலை, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us