தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குற்றம்: பள்ளியில் மாணவர் தீக்குளிக்க முயற்சி

குற்றம்: பள்ளியில் மாணவர் தீக்குளிக்க முயற்சி

குற்றம்: பள்ளியில் மாணவர் தீக்குளிக்க முயற்சி


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி தேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தீக்குளிக்க முயன்றார்.

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் சாமுவேல், 19. இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வகுப்புகள் துவங்கி 15 நாட்களுக்கு மேல் ஆகியும், சாமுவேல் பள்ளிக்கு வரவில்லை. "தனக்கு சொந்த வேலை, பொது வேலை நிறைய இருப்பதால் படிக்க வர முடியாது; தன், டிசியை வழங்க வேண்டும்" என பள்ளி நிர்வாகத்திடம் மாணவர் கேட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகம், நீ நன்றாக படிக்கும் மாணவன்; ஏன் படிப்பை தொடர மறுக்கிறாய்; உன் பெற்றோரை அழைத்து வா என, சமரசம் செய்தும் பலன் இல்லை. இந்நிலையில் ஜூன் 13ல் சாமுவேலுக்கு டிசி கொடுத்தனர். அதன் பின், தனக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும், என கேட்டுள்ளார்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், "இன்னும் உதவித்தொகை வரவில்லை" எனக்கூறி உள்ளனர். இதை ஏற்க மறுத்த சாமுவேல், நேற்று பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். தகவலறிந்த போலீசார், சாமுவேலை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், "தீக்குளிக்க முயற்சி செய்வது மிகப் பெரிய குற்றம். குறிப்பாக மாணவர்கள், இது போன்ற செயல்களை நினைத்து பார்க்கவே கூடாது. அந்த மாணவருக்கு உதவித்தொகை வந்தவுடன் வழங்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us