மாற்றுத்திறனாளி மாணவி படிப்பிற்கு காவலர்கள் நிதியுதவி
மாற்றுத்திறனாளி மாணவி படிப்பிற்கு காவலர்கள் நிதியுதவி
UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM
ADDED : ஜூலை 01, 2014 01:54 PM
புதுச்சேரி: மாற்றுதிறனாளி மாணவி மேற்படிப்பிற்காக பெரியக்கடை போலீசார் சம்பள பணத்தில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தனர்.
சஞ்சீவி நகரை சேர்ந்த ஏழுமலை மகள் லீலாவதி(18). மாற்றுத்திறானளி மாணவி. இவர் தேங்காய்த்திட்டில் உள்ள பச்சையப்பன் செவித்திறன் குறைப்பாடு சிறப்பு பள்ளியில், படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 375 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவி மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் மேற்படிப்பு படிக்க உள்ளார். இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் நிலை குறித்து அறிந்த பெரியகடை போலீசார், தந்தையை இழந்த தனியார் கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தாயின் அரவணைப்பில் உள்ள மாணவி லீலாவதியின் மேற்படிப்பு செலவிற்காக பெரியகடை போலீசார் தங்களுடன் பணிபுரியும் சக போலீசாரிடம் இருந்து சேகரித்த பணம் 45 ஆயிரம் ரூபாயை இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப் இன்ஸ்பெக்டர் சஜித் முன்னிலையில் நேற்று மாணவியிடம் வழங்கினர்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டுகள் ஜான், பஞ்சநாதன், பரசுராமன், அந்தோணி உள்ளிட்ட அனைத்து போலீசாரும் மாணவியை வாழ்த்தினர்.
