தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்

கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்

கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்


UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM

ADDED : ஜூலை 01, 2014 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM ADDED : ஜூலை 01, 2014 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி: அம்பேத்கர் கலை கல்லூரியில் மாணவர்கள் கத்தி மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெட்டுக்குத்து

வியாசர்பாடியில் உள்ளது அம்பேத்கர் கலைக் கல்லூரி. இருபாலர் பயிலும் கல்லூரியில், நேற்று காலை இரண்டு பிரிவு மாணவ மாணவியருக்கான தமிழ் வகுப்பு ஒரு சேர நடந்தது. அப்போது மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கேலி கிண்டல் செய்தனர். சிலர் மாணவியரை கிண்டல் செய்தபடி இருந்தனர்.

அப்போது புளியந்தோப்பு, கஸ்தூரி பாய் காந்தி நகரை சேர்ந்த அரவிந்த்குமார், 19, மற்றும் கிரே நகரை சேர்ந்த அஜீத்குமார், 19, ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வகுப்பு முடிந்து மாணவர்கள் மதியம் 12:00 மணிக்கு கலைந்து சென்றனர். அப்போது அஜீத்குமாரை வழிமறித்து கத்தியால் அரவிந்த்குமார் தாக்கினார். தாக்குதலில் அஜீத் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.

சில மாணவர்கள் அரவிந்த்குமார் மீது கல்வீசி தாக்கினர். அதில் அரவிந்த்குமார் மண்டை உடைந்தது. அங்கு சென்ற எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் விமல் ஆகியோர் தலைமையிலான போலீசார், மாணவர்களின் மோதலை தடுத்து நிறுத்தினர்.

காயமடைந்த அஜீத்குமார், அரவிந்த்குமார் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அஜீத்குமார் ஸ்டான்லியில் சேர்க்கப்பட்டார். அரவிந்தகுமாரிடமிருந்து ஒரு அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


மற்றொரு கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம்

திருத்தாங்கல் நாடார் தனியார் கல்லூரி கண்ணதாசன் நகரில் உள்ளது. இருபாலர் பயிலும் கல்லூரியில் காலை 8:30 மணிக்குள் கல்லூரிக்கு வந்து விட வேண்டும். ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவை அணியக்கூடாது போன்ற கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன.

நிர்வாகத்தின் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாணவ மாணவியர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மணலி மற்றும் கொடுங்கையூர் போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து அவர்கள் வகுப்புக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us