UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM
ADDED : ஜூலை 04, 2014 11:59 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: அல்லிகுளம் அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
அன்னுார் பேரூராட்சி பகுதியில் அல்லிகுளத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் இரண்டு முதல் ஐந்து வயது வரையுள்ள 20 குழந்தைகள் படிக்கின்றன. அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் இம்மையம் அமைந்துள்ளது.
அங்கன்வாடி கட்டடத்தின் மேற்புறம் மற்றும் வெளிப்பகுதியில் பல இடங்களில் ஆழமாக விரிசல் விட்டுள்ளது. சில இடங்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுகிறது. 20 குழந்தைகள் படிக்கும் இந்த மோசமான கட்டடத்தில் விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது. அரசு உடனே இக்கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அல்லிகுளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
