UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM
ADDED : ஜூலை 24, 2014 01:57 PM
அ நிறம் | அளவு
உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அக மேற்பார்வை பயிற்சி நடந்தது.
இதில் கற்பித்தல் முறைகள் படித்தல், எழுதுதல், அடிப்படை கணித செயல்பாடுகள், மதிப்பீட்டு முறை நிர்வாகம், மேலாண்மை, பள்ளி திட்டமிடல் ஆகியவற்றில் அக மேற்பார்வை மேற்கொள்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் எழிவளவன், மயில்சாமி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் இளையராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர்.
ஜெயங்கொண்டம், தா.பழூர் யூனியன்களை சேர்ந்த 41 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பயிற்சி பெற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் தாமோதரன் வரவேற்றார். அற்புதசாமி நன்றி கூறினார்.
