UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 03:49 PM
அ நிறம் | அளவு
கோவை: ஒவ்வொரு மாணவரும், தங்களது குருவை மதிக்கும் பண்பை பெற்றிருத்தல் அவசியம். இப்பண்பே, வாழ்வை வளமாக்கும் என, கே.கே.இ.டி., கல்லுாரியின் இயக்குனர் நடராஜன் பேசினார்.
நரசிபுரம், கோயமுத்துார் இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவில், கல்லுாரி முதல்வர் நாகராஜன் வரவேற்றார். கே.கே.இ.டி., கல்லுாரியின் இயக்குனர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், "பொறியியல் படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் அதிகளவில் காத்திருக்கின்றன. ஆகவே, மாணவர்கள் தங்களது தனித் திறமையுடன், செய்முறை பாட அறிவை வளர்த்து கொள்ளுதல் அவசியம்.
தன்னம்பிக்கையும், ஆழ்ந்த சிந்தனையுமே, சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஊன்றுகோலாக தம்மை நிலைநிறுத்த உதவும்" என்றார்.
