UPDATED : நவ 24, 2014 12:00 AM
ADDED : நவ 24, 2014 11:14 AM
மாமல்லபுரம்: சென்னை அணுமின் நிலையம் சார்பில், சதுரங்கப்பட்டினம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 15.60 லட்சம் ரூபாய் செலவில், கூடைப்பந்து மைதானம் மற்றும் மிதிவண்டி நிழற்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டன.
கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் விளையாட்டு மேம்பாட்டிற்காக, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், பள்ளியில் நிறுத்தப்படும் மாணவ, மாணவியரின் மிதிவண்டி பாதுகாப்பிற்கு, நிழற்கூடம் ஆகியவை அமைக்க வேண்டும் என, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை பரிசீலித்த நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புக் குழு திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் செலவில், கூடைப்பந்து விளையாட்டு மைதானம், 3.60 லட்சம் ரூபாய் செலவில் மிதிவண்டி நிழற்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
