UPDATED : நவ 25, 2014 12:00 AM
ADDED : நவ 25, 2014 12:09 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., சித்தா பிரிவுக்கு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று நடந்தது.
ஒதுக்கீட்டு பிரிவில், ஏதோ குளறுபடி நடக்கிறது; வெளிப்படைத் தன்மை இல்லை என, கலந்தாய்வுக்கு வந்தோர், திடீரென போர்க்கொடி உயர்த்தினர். இதனால், கலந்தாய்வு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். விதிமுறைப்படிதான் கலந்தாய்வு நடக்கிறது; எந்த குளறுபடியும் இல்லை என, சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின், போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வு நடந்தது. கடந்த வாரம் நடந்த சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புக்கான மறு கலந்தாய்விலும், இதேபோன்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
