UPDATED : டிச 06, 2014 12:00 AM
ADDED : டிச 06, 2014 10:52 AM
அ நிறம் | அளவு
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் பள்ளி கட்டடத்தின் மேல்பகுதியில் மரம், செடிகள் வளர்ந்துள்ளன.
மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை பெண்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கட்டடத்தின் மேல்புறத்தில் அரச மரமும், சிறு செடிகளும் வளர்ந்துள்ளன. மரத்தை உடனடியாக கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மேல்தளம் மரத்தின் வேர் விட்டு சேதமடையும் நிலை ஏற்படும்.
