அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்
அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்
UPDATED : டிச 06, 2014 12:00 AM
ADDED : டிச 06, 2014 10:50 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி மின்னணு பொறியியல் துறை தலைவர் டாக்டர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். நேற்று துவங்கிய பயிற்சி முகாம் வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. அண்ணா பல்கலை கழக பேராசிரியர்கள் பழனி, சரஸ்வதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.
