UPDATED : டிச 30, 2014 12:00 AM
ADDED : டிச 30, 2014 11:27 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நூலக வளர்ச்சிக்காக, சிசிடிவி கேமரா, தண்ணீர் தொட்டி, கம்ப்யூட்டர் மற்றும் லேசர் பிரிண்டர் வழங்கிய நன்கொடையாளர்களுக்கும், நூலக வாரவிழாவில், பங்கேற்ற கவிஞர்கள், பேச்சாளர்கள், அறிஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது; நூலகத்தில் சிறுவர் வாசகர் வட்டம் ஏற்படுத்துவதுடன், மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்று கிழமை, சிந்தனை அரங்கம் நடத்துவது; கோத்தகிரி மார்க்கெட் சாலைக்கு நூலகம் சாலை என பெயர் வைக்க, வலியுறுத்துவது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
