UPDATED : டிச 30, 2014 12:00 AM
ADDED : டிச 30, 2014 11:32 AM
அ நிறம் | அளவு
கம்பம்: கம்பம் புதுப்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே ஜூடோ சண்டை பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மஞ்சள் கிரேடிங் 51 மாணவர்களுக்கும், ஆரஞ்ச் கிரேடு 9 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அடிபடாமல் கீழே விழுந்து எழுவது, டைவ் அடித்து எதிரியை தாக்குவது, எதிரியை அடித்து தூக்கி எறிவது போன்ற நுணுக்கங்கள் மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
