UPDATED : ஜன 07, 2015 12:00 AM
ADDED : ஜன 07, 2015 11:13 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு விருட்ஷா குளோபல் பள்ளியில் மாநில சிறுவர், சிறுமியர்களுக்கான செஸ் போட்டிகள் நடந்தன.
பல்வேறு பிரிவுகளில் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி ஏ.அகல்யா எட்டு சுற்றுகளில் ஆறரை புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றார். முதல், இரண்டாமிடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுடன் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாடி உற்சாகப்படுத்தினார். அகல்யாவுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
