தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மண்டல அளவிலான செஸ் போட்டி முடிவுகள்

மண்டல அளவிலான செஸ் போட்டி முடிவுகள்

மண்டல அளவிலான செஸ் போட்டி முடிவுகள்


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான செஸ் போட்டியில், ஓபன் பிரிவில், கிருஷ்ணகுமார் முதலிடம் வென்றார்.

திருப்பூர், பெஸ்ட் சேலன்ஜர் செஸ் கிளப் சார்பில் மண்டல அளவிலான செஸ் போட்டி, கஸ்தூரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. போட்டியை, திருப்பூர் மாவட்ட செஸ் கழக செயலாளர் லட்சுமணசாமி துவக்கி வைத்தார். 10, 13, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓபன் பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது.

போட்டி முடிவுகள்

10 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், அஸ்வின் முதலிடம், அனீஷ் இரண்டாமிடம், கணேஷ்பாரதி மூன்றாமிடம் வென்றனர். மாணவியர் பிரிவில், அரும்புகழ் முதலிடம், ரிதுவர்ஷினி இரண்டாமிடம், ஜனனி மூன்றாமிடம் வென்றனர்.

13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், சுதன் முதலிடம், லோகேஸ் இரண்டாமிடம், அஜீஸ்விக்ரம் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில், தர்ஷனா முதலிடம், ஸ்ரீமொழி இரண்டாமிடம், நித்யஸ்ரீ மூன்றாமிடம். 17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், ரத்தீஷ் முதலிடம், கங்காதரன் இரண்டாமிடம், தினேஷ்குமார் மூன்றாமிடம்.

மாணவியர் பிரிவில், மதுமிதா முதலிடம், சின்னகமலி இரண்டாமிடம், கீர்த்திகா மூன்றாமிடம் வென்றனர். ஓபன் பிரிவில், கிருஷ்ணகுமார் முதலிடம், ராமன் இரண்டாமிடம், செனிராகிளாட் மூன்றாமிடம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us