தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6 மாதங்கள் கடந்தும் மாணவர்களுக்கு சீருடை வழங்காத அவலம்

6 மாதங்கள் கடந்தும் மாணவர்களுக்கு சீருடை வழங்காத அவலம்

6 மாதங்கள் கடந்தும் மாணவர்களுக்கு சீருடை வழங்காத அவலம்


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், செட்டிப்பட்டு அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, 6 மாதங்கள் கடந்தும் சீருடை வழங்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தலா 2 செட் சீருடை வழங்கப்படும். நடப்பு 2014-15ம் ஆண்டிற்கான சீருடைகள் கடந்த ஆண்டு பள்ளி துவங்கிய ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது. ஆனால், செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வியாண்டு துவங்கி 6 மாதங்கள் கடந்தும், சீருடை வழங்கப்படவில்லை.

இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்புவரை நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சீருடை வழங்காததால், மாணவர்கள் வண்ண ஆடை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உடனடியாக மாணவர்களுக்கு சீருடை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கூறுகையில், "இந்த பள்ளி இருப்பதே கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியுமா? என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால், பல ஆண்டுகளாக ஒரு கல்வித்துறை அதிகாரிகள் கூட இந்த பள்ளி பக்கம் வரவில்லை. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகள் பள்ளியில் உள்ளது" என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us