தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி

மாவட்ட அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி

மாவட்ட அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில், கொங்கு கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கோவை சத்தி சாலையில் உள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி நடந்தது. இதில், மாவட்டத்தில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில், கொங்குநாடு பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில், எஸ்.ஆர்.இ.சி., மற்றும் கே.சி.டி., அணிகள் மோதின. இதில், 25 - 23, 25 - 21 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.இ.சி., அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில், கொங்குநாடு பொறியியல் மற்றும் எஸ்.ஆர்.இ.சி., அணி விளையாடியது. இதில், 22 - 25, 25 - 21, 28 - 26 என்ற செட் கணக்கில், கொங்கு அணி வெற்றி பெற்றது. எஸ்.ஆர்.இ.சி., அணி இரண்டாவது இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us