UPDATED : பிப் 06, 2015 12:00 AM
ADDED : பிப் 06, 2015 11:57 AM
ராமநாதபுரம்: கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், பிப்., 14 ல், ராமநாதபுரத்திலும், பிப்., 21 ல், பரமக்குடியிலும் நடக்கிறது.
மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம், பிப்., 14ல், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியிலும், பிப்., 21 ல், பரமக்குடி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலையின் பெயர், தேவைப்படும் நபர்கள், ஊதிய விபரம் போன்ற தகவல்களை திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 1/314 பாரதிநகர், ராமநாதபுரம் என்ற முகவரியிலும் dpiurnd@yahoo.com என்ற மின்னஞ்சலிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 94450 34177, 94450 31179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
