பள்ளி மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் அமல்படுத்த கோரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் அமல்படுத்த கோரிக்கை
UPDATED : அக் 28, 2015 12:00 AM
ADDED : அக் 28, 2015 10:22 AM
கரூர்
: தனியார் பள்ளிகளை போல், அரசு
பள்ளிகளிலும் இன்சூரன்ஸ் அமல்படுத்த வேண்டும், என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகிறது. தமிழக அரசு சார்பில், இலவச பாட புத்தகம், பஸ் பாஸ், சீருடை, புத்தக பை, லேப்டாப் உள்ளிட்ட, 16 வகையான விலையில்லாத பொருட்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, இன்சூரன்ஸ் திட்டத்துக்காக, 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம், விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சிகிச்சை பெறும் வசதிகள் கிடைக்கின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளிலும், தனியார் இன்சூரன்ஸ் அமைப்பு, மாணவர்களிடம் மூன்று ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை குறைந்த கட்டணம் வசூலித்தன.
காயமடைதல் அல்லது
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி
வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டதால்,
அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாகனியாக உள்ளது.
தனியார் பள்ளிகள் போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்சூரன்ஸ்
அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்பது பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து,
அரசுபள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
தனியார் இன்சூரன்ஸ் சார்பில், அரசு பள்ளி மாணவர்களிடம், மூன்று ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. காயம் மற்றும் உயிரிழப்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்கப்பட்டது. திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது, தனியார் பள்ளிகளில் மாணவர்களில் தலா, 100 ரூபாய் இன்சூரன்ஸிக்காக வசூலிக்கப்படுகிறது. இதேபோல், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், இன்சூரன்ஸ் அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.
