தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறை இல்லாத பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்

வகுப்பறை இல்லாத பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்

வகுப்பறை இல்லாத பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்


UPDATED : நவ 13, 2015 12:00 AM

ADDED : நவ 13, 2015 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2015 12:00 AM ADDED : நவ 13, 2015 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: நான்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் வசதிக்காக, அறிவியல் ஆய்வகம், கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டும் பணிகள், நபார்டு வங்கி நிதியுதவியுடன், 7.38 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.

திருத்தணி வருவாய் கோட்டத்தில், ஆற்காடுகுப்பம், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள, நான்கு மேல்நிலைப் பள்ளிகளில், போதிய வகுப்பறைகளும், அறிவியல் ஆய்வகங்களும் இல்லை. மேலும், இப்பள்ளிகளில் கழிப்பறையும், சுற்றுச்சுவரும் இல்லை. இதனால், பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் அமர்ந்து பயின்று வந்த மாணவர்கள், செய்முறை பயிற்சியின் போது, மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

இதையடுத்து, பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, திருத்தணி பொதுப்பணி துறையின், கட்டடம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டத்தின் மூலம், இந்த நான்கு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நபார்டு வங்கி நிதியுதவியுடன், 7.38 கோடி ரூபாய் செலவில், நான்கு பள்ளிகளில் மொத்தம், 43 வகுப்பறைகள், நான்கு அறிவியல் ஆய்வகங்கள், 14 கழிப்பறைகள் மற்றும் மூன்று பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட, டெண்டர் விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இதுதவிர, ஒரு பள்ளியில், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது, கட்டட கட்டுமானப் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. இதுகுறித்து, திருத்தணி பொதுப்பணி துறை உதவி செயற் பொறியாளர் பழனி கூறுகையில், நான்கு அரசு பள்ளிகளில், வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள், ஆறு மாதங்களுக்கு முன் துவங்கின. இம்மாதத்திற்குள் இப்பணிகளை முடித்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கட்டடங்கள் விடப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us