UPDATED : நவ 14, 2015 12:00 AM
ADDED : நவ 14, 2015 10:49 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்
: புதிய
கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில்
நடந்தது.
தமிழக அரசின் அறிவுரைபடி, புதிய கல்விக் கொள்கை உருவாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக, தங்களது ஆலோசனைகளை, வரும், 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
இதில், பெரியார் பல்கலை பேராசிரியர், அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரி முதல்வர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
