தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி

பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி

பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி


UPDATED : டிச 04, 2015 12:00 AM

ADDED : டிச 04, 2015 02:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2015 12:00 AM ADDED : டிச 04, 2015 02:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: பாரதியார் பல்கலையின் அண்ணா ஐ.ஏ.எஸ்.
, பயிற்சி மையத்தில் வழங்கப்படவுள்ள ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும், 23ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி.,யால் நடக்கவுள்ள ஐ.ஏ.எஸ்., முதல்நிலைத் தேர்வு அடுத்தாண்டு ஆக., ௭ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான முழு நேர இலவச பயிற்சி முகாம், பாரதியார் பல்கலையின் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், அடுத்தாண்டு பிப்., 8ம் தேதி துவங்குகிறது.

இம்மையத்தில், தேர்வுக்கான பயிற்சி, சர்வதேச மாணவர் விடுதியில் தங்குமிடம் (வெளிமாவட்டம்), நுாலக வசதி, இணையதள வசதி, 2,௦௦௦ ரூபாய் மாத உணவுப்படி ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆறு மாதம் நடக்கவுள்ள முழு நேர பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கான நுழைவுத் தேர்வு, ஜன., 6ம் தேதி காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை பல்கலையில் நடக்கிறது.

யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்வின் அடிப்படையில் இத்தேர்வு நடக்கிறது. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், ௧௦ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வரும், ௨௩ம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலையை நேரடியாகவோ அல்லது, பல்கலையின் www.bu.ac.in/news.asp என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து, பூர்த்திசெய்த விண்ணப்பங்களை வரும், 23ம் தேதிக்குள், டாக்டர் பத்மாநாபன், ஒருங்கிணைப்பாளர்/பயிற்சி இயக்குனர், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 46 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 0422 2428252 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us