தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் கைவிடப்பட்ட ’பசுமை போர்வை’ திட்டம்

பள்ளிகளில் கைவிடப்பட்ட ’பசுமை போர்வை’ திட்டம்

பள்ளிகளில் கைவிடப்பட்ட ’பசுமை போர்வை’ திட்டம்


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: புவி வெப்பமயமாதலை தடுக்க
, துவங்கப்பட்ட பசுமை போர்வைத்திட்டம் பள்ளிகளில் முடக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் நான்கு பள்ளிகள் தேர்வு செய்து, பசுமை போர்வை திட்டம், 2010ல் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் வீதம், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டம் மூலம், இயற்கை வளம் காக்கவும், புவி வெப்ப மயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாக வும் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட்டு முறையாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நான்கு பள்ளிகள் தேர்வு செய்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுளாக இத்திட்டம் நிதியின்மையால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மன்றம், இயற்கை மன்றம் என்ற பெயரில் பெயரளவில் இருந்தாலும், முன்பு ஒதுக்கப்பட்ட நிதிபோன்று இம்மையங்களுக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

சமூக ஆர்வலர் கற்பகம் கூறுகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, பசுமை போர்வைத்திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடும், செயல்பாடுகளும் இன்றி முடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால், இக்குழு தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us