UPDATED : மார் 22, 2016 12:00 AM
ADDED : மார் 22, 2016 10:38 AM
புதுச்சேரி
: புதுச்சேரி
அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் 2013ம் ஆண்டு பயின்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு, பட்டமளிப்பு விழா கல்லுாரி கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜலு வரவேற்றார். திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கழக இயக்குனர் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
பொறியியல் இளங்கலை பட்டம் பெற்ற 412 மாணவ, மாணவியர், முதுகலை பொறியியல் முடித்த 191 என, மொத்தம் 603 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். விழாவில், கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
