கரையான்களால் கரையும் புத்தகங்கள் குப்பையாய் குவியுது
கரையான்களால் கரையும் புத்தகங்கள் குப்பையாய் குவியுது
UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 10:56 AM
கள்ளிக்குடி
:
கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில், இடியும்
நிலையில் உள்ள அரசு கிளை நுாலகத்தில் கரையான்கள் அரித்து வருவதால் புத்தகங்கள்
குப்பையாக குவிகின்றன.
இந்நுாலகம் 1997ல் திறக்கப்பட்டது. தினமும் 30 பேர் வருகின்றனர். மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் இந்நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு விளக்கு வசதி, இருக்கைகள் இல்லை. மின்ஒயர்கள் அறுந்து தொங்குகிறது. மின்கசிவு ஏற்பட்டால், அனைத்து புத்தகங்களும் கருகும் நிலை உள்ளது.
மேலும் புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கரையான்கள் அரித்து குப்பைகளாக குவிகின்றன. நுாலகத்துறை வழங்கிய 5 ஆயிரம் புத்தகங்கள் மூடைகளில் முடங்கி கிடக்கின்றன. கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.
நுாலகர் அல்லி கூறுகையில், நுாலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்க ரேக்குகள் இல்லை. பீரோ உடைந்துவிட்டது. அதனால் தான் புத்தகங்கள் சிதறியுள்ளன. நுாலக உதவியாளர் இருந்தால், புத்தகங்களை பராமரிக்க உதவியாக இருக்கும் என்றார்.
