தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவரை தலைமை ஆசிரியர்தாக்கியதாக உறவினர் முற்றுகை

மாணவரை தலைமை ஆசிரியர்தாக்கியதாக உறவினர் முற்றுகை

மாணவரை தலைமை ஆசிரியர்தாக்கியதாக உறவினர் முற்றுகை


UPDATED : ஏப் 16, 2016 12:00 AM

ADDED : ஏப் 16, 2016 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2016 12:00 AM ADDED : ஏப் 16, 2016 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி
: பழநி அருகே கீரனுாரில் தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரை தேர்வு அட்டையால் தாக்கியதாகக்கூறி
, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 

கீரனுார் காலனித்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் மோகன் குமார்,12. இவர் அதே பகுதியிலுள்ள குருகுலம் நடுநிலைப் பள்ளியில் 6ம்வகுப்பு படிக்கிறார். இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு ஏப்.,13 பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார். அப்போது தலைமையாசிரியை சுப்புலட்சுமி, ஏன் முன் அனுமதி பெறமால் விடுமுறை எடுத்தாய் என, சத்தம்போட்டு மோகன் குமாரை, தேர்வு எழுதும் அட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தலையில் காயமுடன் மோகன்குமார் கீரனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். தகவலறிந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுடன் உதவிதொடக்க கல்வி அலுவலர் மல்லிகா பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்தார். அதன்பின் உறவினர் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us