UPDATED : மே 09, 2016 12:00 AM
ADDED : மே 09, 2016 10:54 AM
சென்னை:
ரஷ்ய கலாசார மையத்தில், ரஷ்ய அரசின் முன்னணி மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி
நிறுவனங்கள்பங்கேற்கும் கல்வி கண்காட்சி நடக்கிறது.
சென்னை, ஆழ்வார்பேட்டை கஸ்துாரி ரங்கா சாலையில் உள்ள, ரஷ்ய கலாசார மையத்தில், கல்வி கண்காட்சி இன்று நடக்கிறது. ரஷ்ய அரசின் எட்டு முன்னணி, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும், இக்கண்காட்சி, காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும்.
தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் துாதரகம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட, ஸ்டடி அப்ராட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. மதுரையில், மே, 9ல், ரெசிடென்சியல் ஓட்டலில் நடக்கிறது. பின், திருவனந்தபுரம், மும்பை மற்றும் டில்லி ஆகிய இடங்களில் கண்காட்சி நடக்க உள்ளது.
கண்காட்சி குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள, 044 - 2498 8215, 92822 21221 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
