தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனையியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் செயல்படுமா?

மனையியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் செயல்படுமா?

மனையியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் செயல்படுமா?


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை செயல்படுத்துவதா
, மூடுவதா என முடிவு செய்ய மத்திய குழு மே 30ல் ஆய்வு செய்ய வருகிறது.

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் காமராஜர் ஆட்சி காலத்தில் 1964ல் கொண்டு வரப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல்கலை வளாகத்தில், மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அதே ஆண்டில் நிறுவப்பட்டது. 

இதில் உணவு மற்றும் சத்துணவு துறை, குடும்ப ஆதார நிர்வாகத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, ஆடை அழகு தொழில்நுட்பத்துறை, மனையியல் கல்லுாரி, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கல்வித்துறை என ஆறு துறைகள் செயல்படுகின்றன. இவற்றில் சேர்ந்து பாடம் கற்க குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

70 சதவிகிதம் நிதி டீன் தலைமையில் நிர்வகிக்கப்படும் மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட, கோவை வேளாண் பல்கலைக்கழகம் 30 சதவிகிதம், இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்.) 70 சதவிகிதம் நிதி வழங்குகிறது.

இங்கு ஆண்டு தோறும் பட்டப்படிப்பு, தொழில் கல்வி படித்தவர் எண்ணற்றோர் அரசுப்பணி மற்றும் தொழில் முனைவோராக, தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். இக்கல்லுாரியின் செயல்பாடுகள் குறித்து ஐ.சி.ஏ.ஆர்., குழு 2006ல் ஆய்வு செய்தது. இதில் திருப்தி ஏற்பட்டதால் அடுத்தடுத்த நிதியாண்டிற்கான நிதியை வழங்க குழு ஒப்புதல் வழங்கியது.

மே 30 மீண்டும் ஆய்வு

மதுரை மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து முடிவு செய்ய பத்தாண்டுகளுக்கு பின் ஐ.சி.ஏ.ஆர்., குழு மே 30ல் ஆய்வு செய்ய வருகிறது.

இக்குழுவில் கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் இடம் பெற்றுள்ளார். இக்கல்லுாரியில் வருவாய் குறைவாகவும், செலவினம் அதிகமாகவும் இருப்பதால் குழு ஆய்வு தவிர்க்க இயலாததாகி விட்டதாக கல்லுாரி வட்டார தகவல் தெரிவிக்கிறது. ஆய்வு நடக்க இருப்பதால் கல்லுாரியில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us