தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள் கலெக்டர் அறிவுரை

பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள் கலெக்டர் அறிவுரை

பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள் கலெக்டர் அறிவுரை


UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM

ADDED : ஜூன் 03, 2016 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM ADDED : ஜூன் 03, 2016 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: பெற்றோர் கனவு மெய்ப்படும் வகையில் மாணவர்கள் சாதிக்க வேண்டும்
, என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

மதுரை கல்வித்துறை சார்பில் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, பைகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் அவர் பேசுகையில், மாவட்டத்தில் 1563 பள்ளிகளில் 2,77,161 இலவச புத்தகங்கள், 1,81,234 மாணவர்களுக்கு சீருடைகள், 1,38,675 பேருக்கு பேக்குகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சிரமம் இல்லாமல் கல்வி கற்க அரசு அனைத்து வசதியும் செய்துள்ளது. பெற்றோர் கனவு மெய்ப்படும் வகையில் படித்து மாணவர்கள் சாதிக்க வேண்டும், என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அனந்தராமன், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் துரைப்பாண்டி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us