தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் மீது ’மூன்றாவது கண்’!

பள்ளி மாணவர்கள் மீது ’மூன்றாவது கண்’!

பள்ளி மாணவர்கள் மீது ’மூன்றாவது கண்’!


UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM

ADDED : ஜூன் 17, 2016 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM ADDED : ஜூன் 17, 2016 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாநகராட்சி பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா நிறுவி, மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், ஒழுங்கீனச் செயல்களை தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், கோவையிலுள்ள பள்ளி மாணவர்கள் கடத்தி, கொலை செய்யப்பட்ட போது, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ போலீசார் அறிவுறுத்தினர். ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பள்ளகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைவாக இருப்பதாகவும், பள்ளி நேரத்தில் சீருடையில் வெளியில் சுற்றுவதாகவும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. மேலும், பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் &'மொபைல்போன்&' பயன்படுத்துவதும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு, சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் சிலர் தலைமையாசிரியர் அறை மீது கல்வீசி தாக்கி, ஜன்னல், கதவுகளை சேதப்படுத்தினர். இச்சம்பவங்களை உற்றுநோக்கிய மாநகராட்சி நிர்வாகம், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ முடிவு செய்துள்ளது.

பள்ளி நுழைவாயிலில் உள்பகுதி, வெளிப்பகுதியை கண்காணிக்கும் வகையிலும், தலைமை ஆசிரியர் அறை, வராண்டா மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட பகுதிகளில், &'சிசிடிவி&' கேமரா நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில், 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட, 83 பள்ளிகள் உள்ளன. இதில், எந்தெந்த பள்ளிகளில், பாதுகாப்பு குறைபாடு, ஒழுங்கீன செயல்கள் அதிகம் உள்ளதாகவும், உடனடியாக கண்காணிப்பு கேமரா எங்கெல்லாம் நிறுவ வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

மேயர் ராஜ்குமார் கூறுகையில், பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இருந்து, அனைத்து கேமராவையும் கண்காணிக்க முடியும். இதன் மூலம், மாணவர்களின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், ஒழுங்கீன செயல்கள் கட்டுப்படுத்தப்படும். 

முதற்கட்டமாக, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் திட்டம் அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். வரும் கவுன்சிலர் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் இடம் பெறவுள்ளது, என்றார்.

’ஹவுஸ் கீப்பிங்’ பிரச்னை!

மாநகராட்சி பள்ளிகளில், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனர். ஒரே ஒப்பந்த நிறுவனம் அனைத்து பள்ளிகளுக்கான ஹவுஸ் கீப்பிங் பணியை டெண்டர் எடுத்துள்ளது. பள்ளிகளில், வயதானவர்களையும், போதை ஆசாமிகளையும் காவலர்களாக குறைந்த சம்பளத்தில் நியமித்துள்ளனர். 

மேலும், கழிப்பிடம் பராமரிப்பு, வளாகத்தில் துாய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்வதில்லை. பணியாளர்களை நியமிக்காமலே, பில் போடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையும், மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us