UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 01:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ.பி.,யில் உள்ள பழமையான மத்திய பல்கலைக்கழகம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். கேரளாவில் மலப்புரம், ம.பி.,யில் போபால், மகாராஷ்டிராவில் புனே, பீகாரில் கைதார், மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மண்டல மையங்களை இது அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக,மலப்புரத்தில் ஏலம்குளம் மற்றும் அனாமாங்கட் ஊராட்சிகளில் 400 ஏக்கர் நிலத் தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கேரள கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.
கேரளாவில் மண்டல மையத்தை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அலிகார் பல்கலைக்கழகத்தில் படிக்க கேரள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.