தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஊரடங்கிலும் குவிந்தனர்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஊரடங்கிலும் குவிந்தனர்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; ஊரடங்கிலும் குவிந்தனர்


UPDATED : ஆக 18, 2020 12:00 AM

ADDED : ஆக 18, 2020 12:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2020 12:00 AM ADDED : ஆக 18, 2020 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நேற்று நடந்த மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன், காலை முதலே காத்துக் கிடந்தனர்.
இப்பள்ளியில் 6ம் வகுப்பிற்கான மொத்த இடங்கள் 200 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று முதலே இலவச பாடப்புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us