தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிப்புத்திறனை அதிகரிக்க குடும்ப நுாலக உறுப்பினர் திட்டம்

வாசிப்புத்திறனை அதிகரிக்க குடும்ப நுாலக உறுப்பினர் திட்டம்

வாசிப்புத்திறனை அதிகரிக்க குடும்ப நுாலக உறுப்பினர் திட்டம்


UPDATED : ஆக 19, 2020 12:00 AM

ADDED : ஆக 19, 2020 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2020 12:00 AM ADDED : ஆக 19, 2020 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாசிப்புத்திறனை அதிகரிக்க, குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நுாலக அலுவலர்களுக்கு, பொது நுாலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது, அனைத்து நுாலகங்களிலும் குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திட்ட செயல்பாடுகளை துவக்குவதற்கான வழிகாட்டுதல்களை, பொது நுாலக இயக்குனர், மாவட்ட நுாலக அலுவலர்களுக்கு வழங்கியுள்ளார். 
அதன்படி, பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்க, ஒரே குடும்பத்தில், உள்ள அதிகப்பட்சம், ஐந்து உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில், குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பத்தை சார்ந்த ஒருவர், நுாறு ரூபாய், செலுத்தி, உறுப்பினராகி, ஒரே சமயத்தில், ஐந்து நுால்களை பெறலாம். திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தி, வாசிப்புத்திறனை பெருமளவில் உயர்த்தலாம். 
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்ட விபரங்கள் குறித்து, அனைத்து நுாலகர்களுக்கும், சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நுாலகங்களில், அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், துண்டு பிரசுரங்கள் மூலம், அனைத்து பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திட்ட செயல்பாட்டுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும், உடனடியாக செய்து, நுாலகங்கள் திறந்தவுடன், நடைமுறைப்படுத்த வேண்டும். நுாலகம் வாரியாக குடும்ப நுாலக உறுப்பினர் திட்டத்தில், சேர்க்கப்பட்டவர்கள் விபரத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us