தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐனாதிபதி விருதுக்கு தமிழ்ப் பேராசிரியர் தேர்வு

ஐனாதிபதி விருதுக்கு தமிழ்ப் பேராசிரியர் தேர்வு

ஐனாதிபதி விருதுக்கு தமிழ்ப் பேராசிரியர் தேர்வு


UPDATED : அக் 26, 2009 12:00 AM

ADDED : அக் 26, 2009 01:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2009 12:00 AM ADDED : அக் 26, 2009 01:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்மொழித் தமிழ் மொழியில், சிறப்பாகப் பணியாற்றும் அறிஞர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து நபர்களுக்கு வழங்கப்படும், இளம் அறிஞர் விருதிற்கு, கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ் இணைப்பேராசிரியர் பழனிவேலு, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.  தமிழர் தம் கல்வி வரலாறு என்ற இவரின் ஆய்வேடு, தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டுத்திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளது.

புதுச்சேரி பகுதிகளை கள ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரின் முதுகலை ஆய்வேடு, தமிழர் தம் குடிப்பழக்கம் என்ற நூலாக வெளி வந்துள்ளது.
சென்னை மொழி அறக்கட்டளையின் தமிழ் மரபுத்தொடர் அகராதியில், 1993 முதல் 95 வரை, ஆராய்ச்சி உதவியளராக பணியாற்றியுள்ளார்.   இவரது மரபும் எழுத்து மரபும்&' என்ற நூல், அடுத்து வெளிவர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us