UPDATED : செப் 02, 2020 12:00 AM
ADDED : செப் 02, 2020 08:26 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:
ஓசூரை சேர்ந்த, விஷ்ணுசங்கர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர், தன் பெற்றோர் குமார் - சசிகலா ஆகியோருடன் நேற்று, மாவட்ட கலெக்டர் பிரபாகரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு, கலெக்டர், மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் கலெக்டர் பிரபாகர் கூறுகையில், &'&'கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெற்றி பெற்றுள்ளார். இதேபோல், இம்மாவட்ட மாணவ, மாணவியர் நன்றாக படித்து, இது போன்ற தேர்வில் வெற்றி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்,&'&' என்றார்.
