தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு


UPDATED : செப் 09, 2020 12:00 AM

ADDED : செப் 09, 2020 07:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2020 12:00 AM ADDED : செப் 09, 2020 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி மாணவர்களுக்கு, &'அரியர்&' தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி, தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரமில்லை

இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல் பிறப்பிக்கப்பட்டது. பல்கலை கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், உயர் கல்வித் துறை தலையிட உரிமையில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய, உயர் கல்வித் துறைக்கு அதிகாரமில்லை; தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது குறித்து, பல்கலை சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும்.
கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வுகளை ரத்து செய்துள்ளனர். மாணவர்கள் பலர், 10க்கும் மேல், அரியர் வைத்துள்ளனர். தேர்வு எழுதாமல், இவர்கள் தேர்ச்சி பெற்றால், கல்வித் தரம் குறைந்து விடும். எனவே, உயர் கல்வித் துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தாக்கல் செய்த மனு:

அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது மட்டுமே, நிபந்தனையாக வைக்கப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவு, தகுதியுள்ள மாணவர்களை தடம்புரள செய்து விடும். மாணவர்கள் மற்றும் பல்கலையின் கல்வித் தரம் குறையும்.பல்கலை கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட, அரசுக்கு உரிமையில்லை.
தேர்வுகளை தன்னிச்சையாக ரத்து செய்யவும் உரிமையில்லை. பல்கலை மானியக் குழுவின் வழிமுறைகளுக்கு முரணாக, அரசு உத்தரவு உள்ளது. கல்வித் தரம் குறையும்எனவே, உயர் கல்வித் துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜரானார். முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சார்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த், &'&'தங்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யு.ஜி.சி., வழிமுறைகளை புறக்கணித்து விட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அரசுக்கு அதிகாரமில்லை. 20, 30 அரியர் வைத்திருப்பவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வித் தரம் குறையும்,&'&' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், &'&'பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், அரசுக்கு உள்ள அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளனர். இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து தான், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது,&'&' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 30ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
வெளியானது ஏ.ஐ.சி.டி.இ., கடிதம்

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களுக்கு, &'ஆல் பாஸ்&' அளிப்பதற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே அனுப்பிய, &'இ - மெயில்&' விபரம், &'மொபைல் போன் ஸ்கிரீன் ஷாட்&'டாக நேற்று, &'வாட்ஸ் ஆப்&'பில் வெளியானது.
அந்த இ - மெயிலில் கூறியிருப்பதாவது:

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, முந்தைய பெயிலான பாடங்களுக்கு தேர்வு நடத்தாமலேயே, தேர்ச்சி வழங்குவதாக அறிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. எந்த தேர்வும் நடத்தாமல், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதும், பட்டம் வழங்கும் முறையும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் மாணவர்கள், தொழில் துறையால் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள். உயர்கல்வி படிப்புக்கும் மற்ற பல்கலையால் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள். இதன் காரணமாக, அண்ணா பல்கலையின் அங்கீகாரத்தை வாபஸ் பெறும் நிலைக்கு, ஏ.ஐ.சி.டி.இ., தள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., தலைவருக்கு, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா அனுப்பிய கடிதத்துக்கு, ஏ.ஐ.சி.டி.இ., இந்த பதில் கடிதத்தை அனுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us