தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள்

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள்

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள்


UPDATED : செப் 09, 2020 12:00 AM

ADDED : செப் 09, 2020 07:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2020 12:00 AM ADDED : செப் 09, 2020 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிப்பெயர்ப்பு நுால்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் வெளியிட்டார்.
&'பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட நுால்கள், உலக மொழிகளான, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகியவற்றிலும், மொழி பெயர்க்கப்படும். இப்பணிகளை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும்&' என, 2016 செப்., 13ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.இதை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், 15.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், முதல்கட்டமாக, பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி பெயர்ப்பு நுால்களை, ௨௦௧௯ பிப்., 19ல், முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார். 
அதன் தொடர்ச்சியாக, பிரெஞ்சு, ஜெர்மன் மொழி பெயர்ப்பு நுால் களை, நேற்றுமுன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வர் வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயகுமார், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us