UPDATED : செப் 09, 2020 12:00 AM
ADDED : செப் 09, 2020 07:53 AM
தொழில் துறை சார்ந்த பொறியியல் படித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
பன்னாட்டு தொழிற்சாலைகளின் வருகை மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகளின் விரிவாக்க பணிகள், தொழில் புரட்சி போன்ற காரணங்களால் தொழில் துறை சார்ந்த படிப்புகளின் பக்கம் கவனம் திரும்பி வருகிறது. இதன் காரணமாக உருவானது தான் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படிப்பு.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மனிதவளம், முதலீடு, உபகரணங்கள், ஆற்றல் வளங்கள், தகவல்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து தருவது தான் தொழில்துறை இன்ஜி., படிப்பின் முக்கிய அம்சமாகும்.
பைனான்சியல் இன்ஜினியரிங், குவாலிட்டி இன்ஜினியரிங், வேல்யூ இன்ஜினியரிங், பிராசஸ் இன்ஜினியரிங், புரொடக்சன் இன்ஜினியரிங் ஆகிய இன்ஜி., துறைகளும் தொழில்துறை சார்ந்த படிப்புகளாக கருதப்படுகின்றன.
பிளஸ் 2ல் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களை படித்திருப்பது அடிப்படை கல்வி தகுதியாகும். பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை பல கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இவர்களுக்கு தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
மனித ஆற்றல், சந்தைப்படுத்தல் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை மையமாக கொண்டு கிளைகளை துவங்கி வருகின்றன. இதனால், இந்தியாவிலேயே தொழில்துறை இன்ஜி., படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் இவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
