தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீன கல்லுாரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உத்தரவு

சீன கல்லுாரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உத்தரவு

சீன கல்லுாரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உத்தரவு


UPDATED : செப் 09, 2020 12:00 AM

ADDED : செப் 09, 2020 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2020 12:00 AM ADDED : செப் 09, 2020 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சீன கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இந்தியாவைச் சேர்ந்த, 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர், மருத்துவம் பயில்கின்றனர். கடந்த ஜனவரி யில், சீன புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையை கழிக்க, இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர், தாயகம் திரும்பினர்.
&'ஆன்லைன்&'

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச விமான சேவையை, சீனா நிறுத்தியது. அத்துடன், சர்வதேச மாணவர்கள், ஆசிரியர்கள், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை சீனா திரும்ப தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச், 22 முதல், இந்தியாவும் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால், இந்திய மாணவர்கள், சீனாவுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.
இந்தப் பிரச்னையை, சீனாவில் உள்ள இந்திய துாதரகம், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து, சீன கல்வி அமைச்சகம், இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது, வெளிநாட்டு மாணவர்கள், சீனா திரும்ப முடியாது. அதே சமயம் அவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
கல்லுாரிகள், பல்கலைகள், &'ஆன்லைன்&' வகுப்புகள் மூலம், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான விபரங்களை, வெளிநாட்டு மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அறிவுறுத்தல்

இந்திய மாணவர்கள், சீனாவில் உள்ள இந்திய துாதரகங்களை தொடர்பு கொண்டு, விபரங்களை கோரலாம். மேலும், தாங்கள் பயிலும் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களின் வலைதளங்களை தொடர்ந்து பார்த்து, அவ்வப்போது வெளியாகும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us