தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைவேந்தர் சுரப்பாவை நீக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

துணைவேந்தர் சுரப்பாவை நீக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

துணைவேந்தர் சுரப்பாவை நீக்க ஸ்டாலின் வலியுறுத்தல்


UPDATED : அக் 13, 2020 12:00 AM

ADDED : அக் 13, 2020 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2020 12:00 AM ADDED : அக் 13, 2020 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு, அண்ணா பல்கலை தொடர்பாக, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள சுரப்பாவை, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்&' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

&'ஐந்து ஆண்டுகளில், அண்ணா பல்கலை கழகத்தால், 16௦௦ கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமல், பல்கலை கழகத்தால் சமாளிக்கவும் முடியும். &'எனவே, உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்&' என, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதில், முதல்வருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள சுரப்பாவை, உடனே நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கை எடுக்க, கவர்னருக்கு முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கொள்கையை காவு கொடுக்க முயற்சிக்கும் துணை வேந்தர் கடித விவகாரத்தில், அ.தி.மு.க., அரசு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க., இளைஞரணி, மாணவரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us