தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்று திறனாளிகளுக்கு இணைய வழி பயிற்சி

மாற்று திறனாளிகளுக்கு இணைய வழி பயிற்சி

மாற்று திறனாளிகளுக்கு இணைய வழி பயிற்சி


UPDATED : நவ 20, 2020 12:00 AM

ADDED : நவ 20, 2020 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2020 12:00 AM ADDED : நவ 20, 2020 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த, இலவச இணையவழி திறன் பயிற்சி, இன்று துவங்குகிறது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மாற்று திறனாளிகள் நலத் துறையும் இணைந்து, மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு சார்ந்த, இலவச இணையவழி திறன் பயிற்சியை நடத்துகின்றன. இதில், &'ஆடியோ இன்ஜினியரிங்&' என்ற தலைப்பில், &'ரிக்கார்ட்டிங், டப்பிங், மிக்ஸிங்&' போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த பயிற்சியின் வாயிலாக, சினிமா, தொலைக்காட்சி, செய்தித்தாள், போட்டோ ஸ்டூடியோக்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
பயிற்சியில் சேர விரும்பும் மாற்று திறனாளிகளின் வயது, 18- - 40க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இன்று துவங்கி, டிச., 21 வரை, தினமும் காலை, 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை, வார நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தபடும். மேலும், தகவல்களுக்கு, 044 - -28191203, 28192506, 28192407 என்ற எண்களிலும், jain@nfdcindia.com என்ற, இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us