UPDATED : ஜன 30, 2021 12:00 AM
ADDED : ஜன 30, 2021 09:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி வேளாண்மை அறிவியல் கல்லுாரி, அன்னை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய சங்கம் சார்பில் நவீன தொழில் நுட்பத்தில் மணிலா சாகுபடி குறித்த பயிலரங்கம், செயல்விளக்கம் நடந்தது.
புதுச்சேரி வேளாண்மை அறிவியல் கல்லுாரி பண்ணையில் நடந்த பயிலரங்கத்திற்கு திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். புதுச்சேரி வேளாண்மை அறிவியல் கல்லுாரி சேர்மன் கணேஷ் வரவேற்றார். அன்னை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய சங்கத் தலைவர் சேகர் கலந்துரையாடல் நடத்தினார். வேளாண்மை கல்லுாரி ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
