UPDATED : பிப் 06, 2021 12:00 AM
ADDED : பிப் 08, 2021 10:42 AM
மதுரை:
இலவச &'லேப்டாப்&' வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த காவுதீன் தொடர்ந்த பொதுநல மனு: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு இலவச &'லேப்டாப்&' வழங்கப்படுகிறது. 2017 - 18 கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை.
இதனால், இணைய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த முடியாத பல மாணவர்கள், உயர் கல்வி போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. கொரோனாவால், &'ஆன்லைன்&' வகுப்புகள் நடக்கின்றன. அதில் லேப்டாப் இல்லாத மாணவர்கள் பங்கேற்க இயலவில்லை.
2017- - 18 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச், 4க்கு ஒத்தி வைத்தது.
