தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் பணிக்கு என்.சி.சி., மாணவர்கள் வேண்டாம்

தேர்தல் பணிக்கு என்.சி.சி., மாணவர்கள் வேண்டாம்

தேர்தல் பணிக்கு என்.சி.சி., மாணவர்கள் வேண்டாம்


UPDATED : ஏப் 05, 2021 12:00 AM

ADDED : ஏப் 05, 2021 09:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2021 12:00 AM ADDED : ஏப் 05, 2021 09:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்தல் பணிக்கு என்.சி.சி., மாணவர்கள் செல்வதற்கு, திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வரும்போது, அவர்களுக்கு உதவும் வகையில், மாணவர்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது. அதாவது, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாணவர்களை, தன்னார்வப் பணியில் நியமிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை உத்தரவை காட்டி, என்.சி.சி., மாணவர்களை தேர்தல் பணிக்கு அனுப்புவது, பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

என்.சி.சி., மாணவர்களை தேர்தல் தன்னார்வ பணிக்கு நியமிக்க வேண்டாம் என, 2019 பார்லிமென்ட் தேர்தலின் போது, மத்திய பாதுகாப்பு துறை சார்பில், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 
ஓட்டுப்பதிவு நாளில், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டாலோ, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, அதை சமாளிக்கும் பக்குவம், சிறிய வயது மாணவர்களுக்கு இல்லை என, அதில் காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே, என்.சி.சி., மாணவர்களை தன்னார்வப் பணிக்கு நியமிப்பதை நிறுத்தியுள்ளோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us