UPDATED : ஏப் 28, 2021 12:00 AM
ADDED : ஏப் 28, 2021 09:30 AM
கோத்தகிரி:
கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில், உலக புத்தக தினத்தை ஒட்டி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் புத்தகங்களை வாசித்தனர்.
தமிழ்நாடு அரசு பொது நுாலக துறை மற்றும் மாவட்ட நுாலகம் சார்பில், உலக புத்தக தினத்தை ஒட்டி, வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும், மாலை, 4:30 மணிமுதல், 5:30 மணிவரை, ஒருமணி நேரம் அனைவரும் புத்தகம் வாசிக்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று, கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு கிராமத்தில், திரளான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்தனர்.
நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவியர் ஸ்ரீ வாசவி மற்றும் பவித்ரா ஆகியோர், &'புத்தகம் வாசிப்பதால், பள்ளி பாடங்கள் தவிர்த்து, பொது அறிவு மேம்படுவதுடன், சமூக அக்கறை அதிகரிக்கும்,&' என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், மாவட்ட மைய நுாலகர் ரவி, கிராம பிரமுகர்கள் இளங்கோவன் மற்றும் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.
