தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை

ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை

ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை


UPDATED : ஏப் 28, 2021 12:00 AM

ADDED : ஏப் 28, 2021 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2021 12:00 AM ADDED : ஏப் 28, 2021 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை: 

கொரோனா பரவல் தீவிரத்தால் தமிழகத்திலுள்ள, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் ரத்தானது. மேலும், மே, 5ல் நடப்பதாக இருந்த பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்., 23ல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நிறைவு பெற்றுள்ளது. 
பள்ளிக்கு மாணவர்கள் வராத நிலையில், ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்ல உத்தரவு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகள் இல்லாததாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் விலக்களித்து, வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். 
மாணவர்கள் சேர்க்கை, நலத்திட்ட உதவி வழங்கும்போது மட்டும், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும். கொரோனாவால் நேற்றிலிருந்து வங்கிகள் பிற்பகல், 2:00 வரை செயல்படுவதை போல, கூட்டுறவு வங்கிகள், காப்பீட்டு கழகம், தபால் அலுவலங்கள் அனைத்தும் பிற்பகல், 3:00 மணி வரை செயல்படவும் அல்லது, 50 சதவீத ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்படவும், மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us