தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துவக்கப்பள்ளிக்கு கட்டடம் எதிர்பார்ப்பு

துவக்கப்பள்ளிக்கு கட்டடம் எதிர்பார்ப்பு

துவக்கப்பள்ளிக்கு கட்டடம் எதிர்பார்ப்பு


UPDATED : ஏப் 28, 2021 12:00 AM

ADDED : ஏப் 28, 2021 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2021 12:00 AM ADDED : ஏப் 28, 2021 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை:
ஆழியாறு சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளதால் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
ஆழியாறு சின்னாறுபதி மின்வாரிய அலுவலக வளாகத்தில், சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளி உள்ளது. பந்தக்காலம்மன்பதி, சின்னாறுபதி வனப்பகுதியிலிருந்தும், ஆழியாறு நகர் பகுதியை சேர்ந்த, 82 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கட்டடத்தில், மூன்று சிறிய அறைகளில் பள்ளி செயல்படுவதால், மாணவர்கள் இடமின்றி நெருக்கடியில், நாள்தோறும் சிரமத்துடன் கல்வி கற்கின்றனர். 
ஒரே அறையில், இரண்டு வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து படிப்பதால், ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும்போது பிற வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.இடநெருக்கடிக்கு தீர்வு காண பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு அருகே, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், புதிய கட்டடம் கட்டுவதற்காக வருவாய்த்துறை சார்பில், 25 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டன. ஆனால், கட்டடம் கட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் நிதி ஒதுக்காமல் உள்ளதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:

கடந்த இரண்டு முறை பொதுப்பணித்துறை மற்றும் கோட்டூர் பேரூராட்சி ஒதுக்கிய இடம், பல காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. 12 ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், தற்போது கட்டடம் கட்ட, அரசு இடம் ஒதுக்கியுள்ளது. ஆனால், பள்ளி கல்வித்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகம் நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதால், புதிய கட்டடம் என்பது வெறும் கனவாகவே உள்ளது. ஆண்டு தோறும் பள்ளியில் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கி கட்டடம் கட்ட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us