தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் விதிமீறி நுழைவு தேர்வு: மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

பள்ளியில் விதிமீறி நுழைவு தேர்வு: மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

பள்ளியில் விதிமீறி நுழைவு தேர்வு: மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு


UPDATED : ஏப் 28, 2021 12:00 AM

ADDED : ஏப் 28, 2021 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2021 12:00 AM ADDED : ஏப் 28, 2021 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. 9 முதல், பிளஸ் 2 வரை சில நாட்களுக்கு வகுப்புகள் நடந்தன. மீண்டும் கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சேலம் நான்கு ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான, சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதற்காக காலை முதலே, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். பள்ளி ஆசிரியர்கள், அவர்களை சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு, தேர்வுக்கான வினாத்தாள் வழங்க நடவடிக்கை எடுத்தனர். 
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தொலைபேசியில், பள்ளி தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், மாணவர்கள் உடனடியாக பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி முன் மாணவர்கள், பெற்றோர் திரண்டதால் போலீசார் வந்து அவர்களை அனுப்பி வைத்ததோடு, பள்ளி நிர்வாகத்துக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us