உடற்கல்வி இயக்குனர் காலிப்பணியிடம்; கல்வித்துறையினர் சேகரிப்பு
உடற்கல்வி இயக்குனர் காலிப்பணியிடம்; கல்வித்துறையினர் சேகரிப்பு
UPDATED : மே 08, 2021 12:00 AM
ADDED : மே 08, 2021 04:36 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 பணியிடங்கள் தற்போது வரை காலியாக உள்ளன. மீண்டும் பள்ளி திறப்பதற்குள் இப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதால், எந்தெந்த பள்ளியில் காலிப்பணியிடங்கள் உள்ளன, காலி பணியிடம் ஏற்பட காரணங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக சமர்ப்பிக்க, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
வரும், 10ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
